Breaking
Sun. Dec 22nd, 2024
வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி அழைப்பு. 11 ஆம் திகதி புதன்கிழமை இக் கூட்டம் இடம் பெறுகின்றது.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியும்,பிரதமரும்,மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 ஆம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடும் தொனியில் பேசியதையடுத்து இது தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்த நடவடிக்கையெடுத்துள்ளதாகவும்.இந்த கலந்துரையாடலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினரை கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி காலை கூடிய அமைச்சரவையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி,மற்றும் பிரதமரிடத்தில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் மௌனமாக செயற்படுவது மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதன் அவர்கள் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள பிழையான புள்ளிவிபரங்கள் தொடர்பில் இம்மக்களை வெகுவாக பாதித்துவருவதாகவும்,வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் தானும் ஒருவன் என்ற வகையில் இந்த மக்களின் வேதனைகளையும்,தேவைகளையும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் சகலருக்கும் விளக்கமளிக்க நேரம் தரப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு கிடைத்த அனுமதியின் பேரில் புள்ளி விபரங்களுடன் விவரித்தார்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கையெடுப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் கூறினார். காலை இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மாலைக்கு முன்பு எதிர்வரும் 11 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக எழுத்து மூலமான அழைப்பினை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த அழைப்பு தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைக்கையில் –
1990 ஆம் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் கழிந்த நிலையிலும் இவர்கள் தொடர்பில் பேசாமல்,இம்மக்கள் சிரமத்துக்கு மத்தியில் மீள்குடியேறும் போது அதற்கு எதிரான செயற்பாடுகளையும்,பிழையான தகவல்களையும் வெளியிட்டு இம்மக்களது தேவைப்பாடுகளை மழுங்கடிக்கும் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும்,இது இந்த நாட்டில் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயமாகும் என்பதை அதுவும் வடக்கில் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்ப உறுப்பினர் என்ற வகையில் இந்த போராட்டத்தின் உண்மைத்தன்மையினை எடுத்து கூற வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது.
இந்த மக்களது வாக்குகளால் பாராளுமன்றம் வந்த நான்,எமது மக்கள் தொடர்பில் மௌனமாக இருக்க முடியாது,கடந்த அரசாங்க காலத்தில் இம்மக்களின் மீள்குடியேற்றத்தை ஆரம்பித்த போதும்,அதனையும் தடைபடுத்தினர்.
புதிய  அரசாங்கத்தின் நல்லாட்சியில் வடபுல முஸ்லிம்கள் எதிர்பார்த்தது,கௌரவமான மீள்குடியேற்றத்தை ஆனால் அதனை செய்வதில் காணப்படும் தடங்கள் என்ன என“பது தொடர்பில்,ஜனாதிபதி,பிரதமர்,மற்றும்,அது தொடர்பான அமைச்சரிடத்திலும் பல முறை கேட்டுள்ளேன்.ஆனால் அது நடை முறைக்கு வரவில்லை.
பாராளுமன்றத்தில் எமது மக்களின் இந்த யதார்த்த நிலை தொடர்பில் உரையாற்றியுள்ளேன்.
தற்போது ஜனாதிபதி என்னை வடக்கு,மற்றும் கிழக்கு மாகாண மக்களது மீள்குடியேற்ற நிலை தொடர்பில் கலந்துரையாடல்களை செய்ய அழைப்புவிடுத்துள்ளார்.அதற்கு எமது மக்களது சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் கூறினார்.

By

Related Post