Breaking
Sat. Nov 16th, 2024

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பயங்கரவாத புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட ஒருவர், இன்று இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை பெற்றத் தேசியத் தலைவராக பரிணமித்துள்ளார்.

ஆம், இலங்கை சமூகம் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் றிசாத் பதியுதீனை தனது தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது. றிசாத் பதியுதீன் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்பதற்கு அக்கட்சிக்கு நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் அக்கட்சிக்கு கிடைத்துள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பவற்றைக் கொண்டு இது தெட்டத்தெளிவாகியுள்ளது.

நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனியாகவும் பிரதான தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது செல்வாக்கையும், அதன் தலைமைத்துவ ஆளுமையையும் முழுநாட்டிற்கும் பறைசாற்றியுள்ளது.

இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை கைபற்றுவதே றிசாத் பதியுதீனின் அடிப்படை நோக்கமாக இருந்தது. அதற்கேற்றவகையில் தனது உபாயங்களை வகுத்தார். அதனடிப்படையில் நாடுதளுவிய ரீதியில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

மர்ஹும் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர், தள்ளாடிக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தை தூக்கிநிறுத்திய பெருமையை இதன்மூலம் றிசாத் பதியுதீன் பெற்றுக்கொண்டுள்ளார். (அல்ஹம்த்துலில்லாஹ்)

மர்ஹும் அஸ்ரபின் அகால மரணத்தினால் தவறுதலாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமையையேற்று, தவறுதலாக அக்கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு, அதிக விருப்பு வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக ஆசாத் சாலி கண்டியில் போட்டியிடவிருந்த நிலையிலும் அதனை தடுத்துநிறுத்தி, அங்கு தன்னுடன் சேர்ந்து 2 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினால் போதும். 3 வது வேட்பாளர் வேண்டாமென அடம்பிடித்து அதில் வெற்றிகொண்ட போதிலும்கூட அவரினால் கண்டி மாவட்டத்தில் அப்துல் ஹலீமைவிட அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை) அக்கட்சியினால் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்திலிருந்து தயா கமகே பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளை, முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், பிரதேசவாதம் போன்றவற்றை முஸ்லிம் காங்கிரஸ் ஏவிவிட்டும், முதற்தடவையாக முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையில் தனித்து களமிறங்கிய தேசியத் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மகத்தான சாதனையை நிலைநாட்டியுள்ளது.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் ஆசனங்களை பெற்றுக்கொடுத்த வன்னி மாவட்டம், திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கு பலத்த அடி விழுந்துள்ளது. அம்மாவட்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸினையும் அதன் தலைமையையும் நிராகரித்துள்ளனர்.

இந்த இரு மாவட்டங்களில் இருந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 2 ஆசனங்க்ள கிடைத்துள்ளன. வன்னி மாவட்டத்திலிருந்து கிடைக்கவேண்டிய மற்றுமொரு ஆசனம் திட்டமிட்ட வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடமிருந்து பறிபோயுள்ளது. அதுவும் பணத்திற்கு அடிமையான சிலருடைய நடவடிக்கையே இதற்கு காரணமாகியுள்ளது.

தமிழ் பேரினவாதத்தின் நேரடி அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், சிங்களப் பேரினவாதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பின் மறைமுக ஓடுக்குமுறைக்குமிடையிலும், தமிழ் சிங்கள ஊடக விபச்சாரிகளின் இட்டுக்கட்டப்பட்ட போலி பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் வன்னியில் தேசியத் தலைவர் றிசாத் பதியுதீன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைகிறது.

இவற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் ஆதரவுபெற்ற அலிசாஹிர் மௌலானாவை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து, தேர்தலில் நிறுத்தி, அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான முன்னணியினரை உள்வாங்கியும்கூட முஸ்லிம் காங்கிரஸினால் ஒரு ஆசனத்தைதான் பெற்றுக்கொள்ள முடிந்தது. இருந்துபோதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அமீர் அலி, அங்குள்ள மக்களின் ஆதரவுடன் பெரு வெற்றியீட்டியுள்ளார்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸினால் வடக்குகிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டு அல்லது அவர்களை மறந்துவிட்ட நிலையில் தேசியத் தலைவர் றிசாத் பதியுதீன், வகுத்த வியூகம் காரணமாக 2 தஸாப்தங்களுக்குப் பிறகு அநுராதபுரம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பெற்றுள்ளது. இது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

குருநாகல் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை. வன்னி, அம்பாறை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிறுத்திய ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தால்கூட அப்பிரதேசங்களில் இருந்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் வீதம் மொத்தம் 4 எம்.பி.க்.களை பெற்றுக்கொண்டிருக்க முடியுமாக இருந்திருக்கும்.

அந்தவகையில் மிகசொற்ற வாக்குகள் வித்தியாசத்திலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4 ஆசனங்களை இழந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் குறிப்பிட்ட இந்த 4 மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சற்று பின்னடைவை சந்தித்த 4 பேருமே அடுத்தடுத்த பட்டியலில் உள்ளனர்.

இவையெல்லாம் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் நாடளாவிய ரீதியில் அகில காங்கிரஸ் மக்கள் காங்கிரஸுக்கு, முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன் தலைமை றிசாத் பதியுதீனை முஸ்லிம் சமூகம் தனது தேசிய தலைமையாக அங்கீகரித்துக்கொண்டமையாகும்.

ஆகமொத்தத்தில் இந்த பாராளுமன்றத் தேர்தல், இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைமையாக றிசாத் பதியுதீனை அடையாளப்படுத்தியுள்ளது எனலாம்..!

இந்த தேர்தல் முடிவுகளையடுத்து உலமாக்கள், புத்திஜீவிகள், சமூகநல அமைப்புக்கள் வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் றிசாத் பதியுத்தீன் இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டுமேன கோரிக்கைகளை விடுத்துவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது…!!

Related Post