Breaking
Mon. Dec 23rd, 2024

அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாளை மறுதினம் புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் என சிங்ஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வில்பத்து, மடு போன்ற பகுதிகளில் காடழிக்கப்பட்டு வருவாதகவும் அது தொடர்பிலானவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள சிங்ஹல ராவய குறித்த தினத்திற்குள் ரிசாத் பதியுதீ;ன் கைது செய்யப்படவில்லையாயின் எமது அமைப்பு பலத்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

காடழிப்பு நிறுத்தப்பட்டாலும் அது தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்வோம் என இவ் அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post