Breaking
Thu. Dec 26th, 2024

ஊடகப் பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,புதிய அரசாங்கத்தில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியுதீன் நாளை வெள்ளிக்கிழமை(2015.01;.16)  தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்பு 3 காலி வீதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு இந்த வைபவம் இடம் பெறவுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் தெரிவித்தார்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் இதே பதவியினை வகித்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு மீண்டும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதே அமைச்சினை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post