– அஸ்ரப் ஏ சமத் –
அமைசச்சா் றிஷாத் பதியுதீன் பவுண்டேசனினால் கடந்த (6) ஆம் திகதி கொழும்பு புதுக்கடை சந்தியில் கொழும்பு வாழ் 500 மத்ரசா மாணவா்களுக்கிடையே பேச்சு மற்றும் குர்-ஆன் மனனம் கசீதா, ஆங்கில சிங்கள பேச்சுத் திறன்களை வெளிப்படுத்தி போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தப்பட்டது.
அதில வெற்றி பெற்ற சகல மாணவா்களுக்கும் அமைச்சா் றிஷாத் பதியுதீன், பிரதியமைச்சா் அமீா் அலி ஆகியோாினால் சின்னங்களும் சான்றிதழ் அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கொழும்பு பல்கழைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி அனீஸ், றியாஸ் சாலி, மற்றும் கொழும்பு ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனா்