ராஜபக்ச ஆட்சியின் போது லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்றாகக் கூறப்படும் 5000 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் சதொச நிறுவனத்தின் பிரதான பதில் பொது முகாமையாளர் கே.ஆரியவன்சவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று கே.ஆரியவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனம் கணனிமயப்படுத்தப்பட்டமை, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய சுற்றுலா விடுதி, எரிபொருள் நிரப்பு நிலைய நிர்மாணம், தலைமைச் செயலகம் நவீனமயப்படுத்தப்பட்டமை, வர்த்தக கட்டிடம் நவீனமயப்படுத்தப்பட்டமை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை களஞ்சியப்படுத்த தனியார் களஞ்சியசாலை பயன்படுத்தப்பட்டமை, அரிசி இறக்குமதி, விநியோகம் ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் கே.ஆரியவங்சவிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்படவுள்ளது.