Breaking
Sun. Nov 24th, 2024

‘லங்கா சதொச நிறுவனம்  இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில்  31 பில்லியன் ரூபாவினை கடந்த வருடம் மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 2016 உடன் ஒப்பிடுகையில் இதுவரை 15 சத வீத வளர்ச்சியுடன் இந்த  வலைப்பின்னல் மிக உயர்ந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கொழும்பு 2 இல் அமைந்துள்ள சதொச தலைமையகத்தில் லங்கா சதொச நிறுவனத்திற்கு www.lankasathosa.org என்ற புதிய இணையத்தளமொன்றை ஆரம்பித்து வைத்து  உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட்; இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:லங்கா சதொச நிறுவனம ஊடாக நுகர்வோருக்கு உயர்ந்த தரமுடைய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்குடனும்; இலங்கையின் வாழ்க்கைச் செலவினை நிர்ணயிப்பதில் ஒரு பிரதான வழிமுறையையும் வழங்குவதற்கான கூட்டு அரசாங்கத்தின் பிரதான பொறிமுறை காணப்படுகின்றது.

 புதிய வலைவாசல் (e-commerce) மின்- வணிகத்தை நோக்கிச்செல்லவுள்ளது. 2019 ஜனவரி மாதம் முதல் இந்த இணையத்தளத்திலிருந்து இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த புதிய அணுகுமுறை எங்கள் விற்பனைக்கு பெரும் ஊக்கத்தை வழங்கும்.   2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரையில் லங்கா சதொச 15 சத வீத வளர்ச்சியுடன்  மொத்த வருவாயாக 31 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.

இந்த வளர்ச்சிப்போக்கு இந்த ஆண்டை (2018) மேலும்; வலுவாக்கியது. அதே ஆறு மாதங்களில் தேசிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் துறை 16 சத வீதமாக வளர்ச்சியுற்றது. எனினும் ஏ.சி நீல்சின் (AC Nielsen.) கருத்துப்படி 2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வருவாய் 12 சத வீதமாக வீழ்ச்சியுற்றது.

நுகர்வோருக்கு உயர்ந்த தரமுடைய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்குடன் நாடு முழுவதும் மேலும் பல சதொச விற்பனை நிலையங்களை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 5000 ஊழியர்களுடனான 398 விற்பனை நிலையங்களை லங்கா சதொச கொண்டுள்ளதுடன் மற்றைய நுகர்வோர் பகுதிகளை அடைய அதன் வலைப்பின்னல் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஒரு மெகா அங்காடிகளை அறிமுகப்படுத்த தயாராகின்றது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில லங்கா சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட இன்னும் பலர்  கலந்து கொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Related Post