Breaking
Fri. Sep 20th, 2024
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் தகவல்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

san_01

அதனடிப்படையில் குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் 35 வயதானவர் என்றும் 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் என்றும் சாம்பல் நிற கண்களும், வெள்ளை நிற மேனியுமான நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு நபர் தொடர்பிலும் பொலிஸார் ஓவியமாக வரையப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளனர்.

san_02

40 வயதான மேற்குறிப்பிட்ட நபர் 5 அடியும்,10 அங்குலமும் உடைய பருத்த உடம்பைக் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரால் தேடப்பட்டு வரும் குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்களை பொதுமக்களிடமிருந்து பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விடம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.071-8591753,071-8591770,077-3291500 என்ற தொலைபேசி இலக்கங்களே அவையாகும்.

By

Related Post