Breaking
Sun. Dec 22nd, 2024

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்ற ஆளில்லா கேமராவால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைக்காக அவரது சடலம் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடும் பாதுகாப்புடன் பொரளை பொதுமயானத்தில் தோண்டப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதிக்குள் செல்ல ஊடகவியலாளர்கள் உட்பட ஒருவரும் இடமளிக்கப்படவில்லை.

எனினும் குறித்த பகுதியில் நுளைந்த ஆளில்லா கேமாரா ஒன்று லசந்தவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்றுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

By

Related Post