Breaking
Sun. Dec 22nd, 2024

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று (27) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8 ஆம் திகதி இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த முரண்பாடுகளை தணிக்கும் வகையில் பரிசோதனைகளை மீள மேற்கொள்வதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான் மொஹமட் மிஹால் பொரளை பொது மயானத்திற்கு இன்று காலை 8.45 அளவில் விஜயம் செய்ததை அடுத்து அவரது மேற்பார்வையின் கீழ் சடலம் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்டு, பொரளை பொது மயானத்தில் அவரது சடலம் நல்லடக்கம் செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.

By

Related Post