Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, இராணுவ புலனாய்வு முகாம்களிலுள்ள அனைத்து தகவல்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு கல்­கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் இராணுவ தளபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்றபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய மலகலகே ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக லசந்த சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post