Breaking
Mon. Dec 23rd, 2024
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் மேலும் பத்து பேரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்த பிச்சை ஜேசுதாசன் வசித்து வந்த கிராம சேவைப் பிரிவில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜேசுதாசனுடன் தொடர்புகளைப் பேணியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜேசுதாசனின் தேசிய அடையாள அட்டையைத் திருடி அதனைப் பயன்படுத்தி ஐந்து சிம் அட்டைகளைப் பெற்றுக் கொண்ட நபரை கைது செய்ய விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

லசந்த கொலை தொடர்பில் பிச்சை ஜேசுதாசன் என் கராஜ் உரிமையாளரும் மற்றும் கந்தேகெதர பியவன்ச இன்ற இராணுவப் புலாய்வுப் பிரிவு உறுப்பினரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பிச்சை ஜேசுதாசன் சிறையில் உயிரிழந்ததுடன், பியவன்ச சட்ட மா அதிபரின் உத்தரவிற்கு அமைய விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கொலையாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post