Breaking
Mon. Mar 17th, 2025

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்  மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்களான பிரசன்ன நாணயகார மற்றும் சந்திர வகிஷ்ட ஆகியோரிடம் இன்று (20) காலை குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

லசந்த கொலை விசாரணைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த லசந்த விக்ரமதுங்கவின் குறிப்பு புத்தகம் காணமல் போனமை தொடர்பில் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post