Breaking
Tue. Dec 24th, 2024

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான சந் தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் லசந்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரால் பயன் படுத்தப்பட்டுள்ள இந்த சிம் அட்டைகள் ஐந்தும், அக்காலப்பகுதியில் வெலிக்கடை சிறைக்கைதியாக இருந்த ஒருவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சிறைக்கைதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள நிலையில், சிறையில் இருந்து விடுதலையான அவர் தற்போது இயற்கை எய்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில் லசந்த விக்ரமதுங்கவுக்கு காணப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில், பல நபர்களின் தகவல்களை சேகரித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவை தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

By

Related Post