Breaking
Sun. Nov 24th, 2024

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது.

கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சகாப்தீன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிடமும் இதுதொடர்பில் விசாரணை செய்து, வாக்குமூலம் பதிவுசெய்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கமைய, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய பகுதியில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்டதுடன், பொலிஸ் மாஅதிபரினால் 05 வருடங்களின் பின்னர் வழக்கு விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.


Related Post