Breaking
Fri. Nov 15th, 2024

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் முஸ்லிம் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்படுகின்றனமை இதுவே முதல் முறையாகும்.

பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.

இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதியின் மகனான சாதிக் பாஷா(45) என்பவர் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். இன்றைய வாக்கு எண்ணிக்கையில் மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன் நகர புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள டூட்டிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கடந்த பத்தாண்டுகளாக பதவி வகித்துவரும் சாதிக் கான், மனித உரிமைகள் துறை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் தலைமையிலான மந்திரிசபையில் செல்வாக்கு நிறைந்தவராக அறியப்பட்ட இவர், லண்டன் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த ஆண்டு அந்நாட்டின் நிழல் மந்திரிசபையில் இருந்து விலகினார்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் பழமைவாத கட்சி அதிக வாக்குகளை வாங்கி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

 எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. எனினும், லண்டன் நகர மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில் தொழிலாளர்கள் ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரருமான ஸக் கோல்ட் ஸ்மித்-ஐ பின்னுக்குத்தள்ளி பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதியின் மகனான சாதிக் பாஷா தொழிலாளர்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் நகரின் மேயராக பொறுப்பேற்றுக்கொள்ளும் முதல் இஸ்லாமியர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post