லண்டனில் உள்ள பிரபல இஸ்லாமிய ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்தபோது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இஸ்லாமிய பெண்ணை தாக்கி உள்ளது. இதனால் பள்ளி வளாகம் அருகே பரபரப்பு காணப்பட்டது.
தெற்கு லண்டனில் அல்-கைர் என்ற இஸ்லாமிய ஆரம்ப பள்ளி உள்ளது.இங்கு பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இதில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஒருவர் தனது குழந்தைகளை பாடசாலை முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து செல்ல அந்த பாடசாலை முன்பு காத்து இருந்தார்.
பாடசாலை முடிந்ததும் தனது இரு குழந்தைகளையும் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பர்தா அணிந்த பெண் மீது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் ஒரு பெண் பர்தா அணிந்த பெண்ணின் முகத்தை குத்தி உள்ளார். இதில் நிலைகுனிந்த முஸ்லிம் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
முஸ்லிம் பெண் ஒருவர் மர்ம கும்பலால் தாக்குதல் நடத்தபட்டதை கண்ட பள்ளியின் பெற்றோர் ஒருவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பாதுகாப்பு கருதி தெற்கு லண்டனில் போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.
இது தொடர்பாக உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முஸ்லிம்பெண் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களுடைய வயது 18 என்றும் மற்றொரு பெண்ணின் வயது 35 என்றும் மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.