லண்டன் மேயராக பதவியேற்ற பின்னர் சாதிக் கான் செயல்படுத்திய அபார திட்டம்
பிரித்தானிய தலைநகரான லண்டனிற்கு மேயராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் சாதிக் கான் அபாரமான திட்டம் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.
லண்டன் நகரில் இயங்கி வரும் Hopper பேருந்துகளில் பயணிக்க ஒரு சிறப்பு கட்டண திட்டத்தை சாதிக் கான் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதாவது, இந்த பேருந்துகளில் தொடர்ந்து ஒரு மணி நேரம் பயணம் செய்ய குறைந்தளவு 1.50 பவுண்ட் கட்டணம் உள்ள பயணிச்சீட்டு மட்டும் போதுமானது ஆகும்.
இந்த வசதி மூலம், இரண்டு பயணங்கள் தூரத்தை ஒரே கட்டணம் மூலம் பயணிக்கலாம்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த Hopper பயணச்சீட்டை Pay-As-You-Go Oyster என்ற அட்டைகள் வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம் என மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.