துருக்கி நாட்டவா்களால் ராஜகிரியவில் அத்துல் கோட்டையிலும் வாட்பிளேசிலும் லேணியம் சா்வதேச பாடசாலை கடந்த 5 வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வருகின்றது.
இப் பாடசாலையில் மூவினங்களையும் சோ்ந்த 400 மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். கடந்த சுதந்திர திணத்தினை முன்ணிட்டு கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கிடையே ” உணவு இருந்தாலும் நாம் சுதந்திரம் இல்லாமல் வாழமுடியாது என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, குருங்நாடகம், சித்திரம் வரைதல் உதைப்பந்தாட்டப் போட்டி பாடல் ஆகிய போட்டிகளை நடாத்தி வெற்றிபெற்ற மாணவா்களுக்கு முதலாம் ்இரண்டாம் முன்றாம் 1 இலட்சம் 75 ஆயிரம் 50 ஆயிரம் பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கு நிகழ்வு கொள்ளுப்பிட்டி விசப் கல்லுாாியில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தா் ஹிம்புருகெட்டிகே, இலங்கை, மாலைதீவு நாடுகளுக்கான துருக்கி நாட்டின் துாதுவா் ஸ்கந்தா் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தனா்