Breaking
Mon. Dec 23rd, 2024

பிரபல இணையதளங்களுக்கான தேடு இயந்திரங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘கூகுள்’ தனது முகப்பு பக்கத்தில் உள்ள அடையாளப் பெயரின் எழுத்துக்களில் சிறிய மாற்றத்தை செய்துள்ளது.

இத்தனை காலமாக பெயர்கள் மற்றும் சம்பவங்களை தேடுபொறியில் டைப் செய்து விபரங்களை பயனாளிகள் பெற்றுவந்த நிலையில், வெறும் புகைப்படங்களை வைத்தே அதற்கான சம்பவங்கள் பற்றிய தகவல்களை பெறும் புதிய தேடுமுறைகளை அறிமுகப்படுத்துவுள்ளதாக சமீபத்தில் அறிவித்த ‘கூகுள்’, அனைத்தையும் காலமாற்றத்துக்கு ஏற்ப நவீனமயமாக்கும் முயற்சியில் தனது முகப்பு பக்கத்தில் உள்ள அடையாளப் பெயரின் எழுத்துக்களில் சிறிய மாற்றத்தை செய்துள்ளது.

இதுநாள் வரை கூகுளின் முகப்புப் பக்கத்தில் காணப்படும் Google என்னும் எழுத்துக்களை ஒரு மாயக்கரம் அழித்துவிட்டு, புதிய லோகோவை எழுதுவதைப்போன்ற ஒரு சித்தரிப்புக் காட்சி, கூகுள் முகப்பு பக்கத்தில் இன்று காணப்படுகின்றது.

இந்த மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் இணையதளத்தின் முக்கிய வடிவமைப்பாளரான கை கான்ராகன் என்பவர். ‘முந்தைய ஆண்டுகளைவிட தற்போது கூகுளை பயன்படுத்துபவர்களின் தேடலும், தேவையும் அதிகரித்துள்ளது.

முன்னர் தட்டச்சு மூலம் மெசேஜிங் முறை வாயிலாக ஒருவரையொருவர் தொடர்பு கொண்டதுபோக, தற்போது இணையத்தின் மூலம் பேசவும், தொடவும் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறி வருகின்றது. கைபேசிகள், டி.வி., கைக்கடிகாரங்கள், காரில் உள்ள தொடுதிரை கணினிகள் என பல்வேறு இணைப்புகளின் வாயிலாக கூகுளை பயன்படுத்த மக்கள் ஆரம்பித்துள்ள நிலையில் காலத்துக்கு ஏற்ற நவீனமயம் மிகவும் அத்தியாவசியமானது’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Post