Breaking
Wed. Mar 19th, 2025

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கக் கூடாதென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சகல வலையக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தமது கடமை நேரங்களில் வகுப்பறைகளில் வைத்து கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தமை மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு, கண்டிப்பான உத்தரவை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் பிறப்பித்துள்ளார்.

By

Related Post