வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று, இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும்.
இந்த காற்றழுத்தம் காரணமாக இலங்கை முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த வார இறுதியில் இலங்கையின் அனைத்துப் பகுதிகள், கேரளா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் வெள்ள அபாயம் உள்ளது.
அடுத்த வாரம் திங்கள் முதல் புதன் வரையான நாட்களில், தமிழ்நாடு, கேரளா, தென் கர்நாடகா ஆகியவற்றில், கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு, கொச்சி, மதுரை போன்ற இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான மழைப் பொழிவு இருக்கலாம். கோயமுத்தூர், பெங்களூரு, சென்னையில் வெள்ள ஆபத்து உள்ளது.
கடந்த திங்கட்கிழமை கடலூரில் கரை கடந்த காற்றழுத்தம் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், 60 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் புதிய காற்றழுத்தம் உருவாக்கியிருப்பது அச்சத்தை உருவாக்கியுள்ளது.