வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மோதியுர் ரஹ்மான்(73) டாக்கா சிறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டார்.
இஸ்லாமிய தலைவர் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து ஜமாட் மற்றும் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் சிட்டாங்காங் நகரில் மோதிக் கொண்டனர்.
கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரஹ்மான் நிஜாமின் ஆதரவாளர்களை களைக்க ரப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்க வைக்கப்பட்டுள்ளனர்.