Breaking
Fri. Nov 22nd, 2024

யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர்.

இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்த சென்ற போது அதில் சுமார் இரண்டு இலட்சம் ரூபா போலி பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக குறித்த தரப்பினரால் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தலமையில் இளவாளை பொலிஸார், குறித்த வங்கி அதிகாரிகளிடமும் முறைப்பாட்டை செய்தவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த வங்கியில் இருந்த சீ.சீ.டிவி. வீடியோவை பரிசோதித்து பார்த்ததில் குறித்த நபர்கள் வங்கியில் பணத்தை பெற்றுக்கொண்டு பையினுள் வைத்து செல்வது பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிகமான பூரண விசாரனைகளை மேற்கொள்வதற்காக இவ் வழக்கை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார்.

By

Related Post