நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான தரப்புகளிலிருந்து இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசதி படைத்த செல்வந்தர்கள் இதுவரை காலமும் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றி மோசடி செய்வதன் ஊடாக பெரும் வரி இழப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்கள்.
இதனைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் ஊடாக அவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதே நேரம் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக்கு குறைக்கும் வகையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் குறைக்கப்படவுள்ளது. இதன் மூலம் பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இதுவரை வரி அறவிடப்படாத புதிய துறைகள் தொடர்பிலும் வரிகள் அறிமுகப்படுத்தடவுள்ளது.
மேலும் எதிர்வரும் ஆண்டு தொடக்கம் அரச நிறுவனங்கள் தங்கள் செலவுகளை விட வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையிலான புதிய வழிமுறைகளும் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.