Breaking
Sun. Dec 22nd, 2024

புத்தளம்,திருகோணமலை,அநுராதபுரம் மாவட்டங்களில் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள வசதிகளற்ற குடும்பங்களுக்கு தேவைான இலவச சீமெந்து பக்கட்டுகளை பெற்றுக்கொடுக்க ஆவணம் செய்யுமாறு விடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வேண்டுகோள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பட்டியலில் பாராளுமன்றம் வந்துள்ள அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ருப், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஆகியோரி்ன் சார்பில் இந்த வேண்டுகோள் கடிதத்தை அமைச்சர் றிஷாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள தலா 300 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இந்த உதவிகளை வழங்குமாறும், அதற்கு இணைவாக இம்மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு வீடமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டங்களையும் வழங்குமாறும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post