Breaking
Mon. Dec 23rd, 2024

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உறுதியாக ஆதாரங்கள் காணப்படும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணைகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

By

Related Post