நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையை பரிசோதித்தமை தொடர்பில் வடகொரியாவிற்கு இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த கண்டனம் குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரியதீபகற்பத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வடகொரியாவை கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
பெப்ரவரி 7 ஆம் திகதி வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனையை அடுத்து, பல உலக நாடுகள் அதனை கண்டித்ததுடன் ஐக்கிய நாடுகள் சபை, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.