Breaking
Mon. Dec 23rd, 2024

வட­கொ­ரி­யாவின் அணு ஆயுத மற்றும் ஏவு­கணைத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்கப் போவ­தில்­லை­யென சீனா தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து சீன வெளி­யு­றவுத் துறை அமைச்சர் வாங் யி  நேற்று முன்­தினம் (8) தெரி­வித்­துள்­ள­தா­வது, நாட்டு வளர்ச்­சி­யையும், பாது­காப்­பையும் மேம்­ப­டுத்த வட­கொ­ரியா விரும்­பினால் அவர்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்க நாங்கள் தயா­ராக இருக்­கிறோம்.

இருந்தும், கொரிய தீப­கற்பம் அணு ஆயுத ஆபத்­தில்­லாத பகு­தி­யாக விளங்க வேண்டும் என்­ப­தற்கு நாங்கள் மிகுந்த முக்­கி­யத்­துவம் அளித்து வரு­கிறோம்.

எனவே, வட­கொ­ரி­யாவின் அணு ஆயுதத் திட்­டங்­க­ளுக்கோ, அந்த ஆயு­தங்­களை ஏந்திச் செல்லக் கூடிய ஏவு­கணைத் திட்­டங்­க­ளுக்கோ ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்க மாட்டோம்.

மேலும், ஐ.நா. பாது­காப்புச் சபையின் நிரந்­தர உறுப்­பினர் என்ற முறையில், வட கொரியா மீது விதிக்­கப்­பட்­டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை நாங்கள் அமுல்படுத்துவோம் என கூறியுள்ளார்.

By

Related Post