Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை விடுவிக்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள வடகொரிய தூதரகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
150,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த போது வடகொரியப் பிரஜைகளை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இந்த வடகொரியர்கள் ஓமானிலிருந்து சீனா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால் பணம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரண்டு பிரஜைகளும் இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சிக்கவில்லை எனவும் பயணம் செய்த விமானத்திலிருந்து மற்றுமொரு விமானத்தின் ஊடாக பயணத்தை தொடர முயற்சித்த போதே இலங்கை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இந்தப் பணம் சக நண்பர்கள் மற்றும் அவர்களினால் ஓமானில் உழைக்கப்பட்ட பணம் என தூதரகம் தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்த பணத்தை விடுவிக்குமாறும், குறித்த இரண்டு பிரஜைகளையும் விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By

Related Post