Breaking
Sun. Dec 22nd, 2024
-விடிவெள்ளி  ARA.Fareel-
நாட்டில் மக்கள் சிங்­கள கிராமம், முஸ்லிம் கிராமம், தமிழ் கிராமம் என பிரிந்து வாழ்­வ­தி­னா­லேயே இன ரீதி­யி­லான மோதல்கள் ஏற்­ப­டு­கின்­றன.
கல்­ஹின்னை சம்­ப­வமும் இதன் பின்­ன­ணி­யிலே இடம்­பெற்­றுள்­ளது. எனவே இவ்­வா­றான சம்­ப­வங்­களைத் தவிர்ப்­ப­தற்கு முஸ்லிம் கிரா­மங்­களில் சிங்­க­ள­வர்­களும் சிங்­கள கிரா­மங்­களில் முஸ்­லிம்­களும் குடி­யேற்­றப்­பட வேண்டும் என சிங்­ஹலே அமைப்பின் செய­லாளர் மெதில்லே பஞ்­சா­லோக தேரர் தெரி­வித்தார்.
கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து காயங்­க­ளுக்கு உள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மூன்று பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளையும் சிங்­ஹலே அமைப்பின் பிர­தி­நி­திகள் பார்­வை­யிட்­டனர்.
பின்பு இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மெதில்லே பஞ்­சா­லோக தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,
“நாட்டில் நடை­பெ­று­கின்ற இன ரீதி­யி­லான மோதல்­க­ளுக்கு அர­சாங்­கமே பதில் கூற வேண்டும். இன நல்­லி­ணக்கம் பற்றி பேசும் அரசு ஊட­கங்கள் மூலமே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன.
நல்­லி­ணக்­கத்தை ஊட­கங்கள் மூலம் மாத்­திரம் ஏற்­ப­டுத்தி விட முடி­யாது.
அளுத்­க­மையில் இடம்­பெற்ற சம்­பவம் பற்றி தொடர்ந்து பேசி வரு­கிறோம். ஆனால் அளுத்­கம போன்ற சம்­ப­வங்கள் மீண்டும் ஏற்­ப­டா­தி­ருக்க எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
இத­னா­லேயே இன மோதல்கள் கல்­ஹின்­னையில் மாத்­திரம் அல்ல மற்றும் பல இடங்­க­ளிலும் உரு­வா­கின்­றன.
இன்று நாட்டு மக்கள் இன ரீதி­யி­லான வல­யங்­க­ளாகப் பிரிந்து வாழ்­கி­றார்கள். வடக்கு, கிழக்கு என பிரித்து பேசு­கி­றார்கள்.
வடக்கில் தமி­ழர்­களும் கிழக்கில் முஸ்­லிம்­களும் வாழ்­கி­றார்கள். தெற்கில் சிங்­க­ளவர் தமிழர் முஸ்­லிம்கள் என்று இணைந்து வாழ முடி­யு­மென்றால் கொழும்பு போன்ற நக­ரங்­களில் எல்லா இன­மக்­களும் வாழ முடி­யு­மென்றால் ஏன் வடக்கு கிழக்கில் வாழ முடி­யாது.
வடக்­கிலும் கிழக்­கிலும் சிங்­க­ள­வர்கள் குடி­யேற்­றப்­பட வேண்டும். யாழ்ப்­பா­ணத்தில் சிங்­கள கிராமம் ஒன்று உள்­ளது. அங்கு சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் ஒற்­று­மை­யா­கவே வாழ்­கி­றார்கள். ஆனால் வடக்­கி­லுள்ள அர­சி­யல்­வா­தி­களே அவர்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தைச் சிதைக்­கி­றார்கள். வடக்கு முத­ல­மைச்­சரின் தமிழ் தீவி­ர­வாதம் அங்­குள்ள சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ராக அமைந்­துள்­ளது.
கல்­ஹின்னை ஒரு முஸ்லிம் கிராமம் அங்­கும்­புர ஒரு சிங்­கள பிர­தேசம் இத­னாலே அவர்கள் முரண்­பட்டுக் கொள்­கி­றார்கள். இரு பிர­தே­சங்­க­ளிலும் இரு இன­மக்­களும் கலந்து வாழ்ந்தால் இப்­பி­ரச்­சினை ஏற்­ப­டாது. எனவே நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முயற்­சிக்கும் ஆட்­சி­யா­ளர்கள் திட்­ட­மிட்டு செயற்­பட வேண்டும்.
கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற மோதல்­க­ளுக்­கான கார­ணங்­களை கண்­ட­றி­வதன் மூலமோ சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படுவதினாலோ இரு சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
இதன் மூலம் மேலும் குரோதங்களே வளர்க்கப்படும். எனவே அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சரியான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.

By

Related Post