Breaking
Sun. Jan 12th, 2025

காணமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரையில் நான்கு நாள் அமர்வுகளை யாழ்ப்பாணத்தில்  நடத்தவுள்ளது.

நான்கு தினங்களும் முற்பகல் 8.30முதல் மாலை 5.30 வரையில் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 27ஆம்திகதி வலிகாமம் கிழக்கு(கோப்பாய்) வடமராட்சி வடக்கு(பருத்தித்துறை) வடமராட்சி தென்மேற்கு(கரவெட்டி) ஆகிய பிரதேச சபைளுக்காக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலத்திலும் 28ஆம் திகதி தீவகம் தெற்கு(வேலணை), ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய பிரதேச சபைகளுக்காக தீவகம் தெற்கு(வேலணை) பிரதேச செயலக பிரிவிலும்  அமர்வுகள் நடைபெறவுள்ளன. அத்துடன்  , 29ஆம் திகதி தென்மராட்சி(சாவகச்சேரி), வடமராட்சி கிழக்கு(மருதங்கேணி) ஆகிய பிரதேச சபைகளுக்காக தென்மராட்சி(சாவகச்சசேரி) பிரதேச செயலகத்திலும், மார்ச் முதலாம் திகதி தென்மராட்சி பிரதேசத்திற்காக சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் மூன்று மாதங்கள் அதிகாரிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது தடவையாக வடக்கிற்கான தனது அமர்வுகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post