Breaking
Tue. Dec 24th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

வடக்கில் இன்னும் 38 அகதி முகாம்களில் 54 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா். இம் மக்கள் யுத்தத்தின்பின் முகாம்களில் முடக்கப்பட்ட மக்களாகும். அரசு வடக்கில் அகதி முகாம்களில் வாழும் பெண்கள் தமது காணி பமிகள் மீள பகிா்ந்தளிக்கப்பட வில்லை. கடந்த 30 ஆண்டுகளில் 1 குடும்பமாகிய மக்கள் தற்போது 3அல்லது 4 குடும்பங்களாக்கப்பட்டுள்ளன.

இம் மக்கள் முகாம்களில் வாழ்வது இம் மக்களுக்குரிய காணிகளை பாதுகாப்பு படையினா் இன்னும் அவா்கள் முகாம்களாக வைத்துள்ளனா். அவா்கள் அங்கு சுற்றுலாவும் குடியிருப்புக்களும் பயிா்ச்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இடம் பெயா்ந்த மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ மக்கள் மற்றும் பெண் குடும்பங்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்காக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அளுத்தம் கொடுக்குமுகாக வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலா் நேற்று கொழும்பில் பி.எம். ஜ.சி.எச் யில் ஒன்று கூடினாா்கள்.

இவா்களது பிரச்சினைகளை் பற்றி கலந்துரையாடுவதற்காக தேசிய மீனவ நட்புரவு ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தெற்காசிய சிவில் அமைப்பின் பிரநிதிகள் சமுகம்மளித்து இம் மக்களத பிரச்சினைகளை கேட்டறிந்தனா்.

இதில் யாழ்ப்ாணம், திருகோணமலை, மன்னா். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில யுத்த்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பின் பிரநிதிகள் சமுகமளித்து தமது கருத்துக்களை முன் வைத்தனா்.

இந் நிகழ்வில் காலாநிதி நிமல்கா, யாழ்பாபண அரச அதிபா் காரியலாயத்தின் அதிகாரி, கிழக்கு காணி அமைச்சின் அதிகாரிகள் அமைச்சா் மனோ கனேசன், மீள்குடியேற்ற அமைச்சின் பிரநிதிகளும் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனா். அத்துடன் அவா்களிடம் இம்மக்களது காணி மற்றும் இதுவரை அகதி முகாம்களில் வாழும் விபரங்கள் அடங்கிய அறிக்கையும் சமா்ப்பிக்கப்பட்டது.

Related Post