யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியேற்றும் அரசின் செயற்றிட்டங்களுக்கு அமைய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 701.3 ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காங்கேசன்துறையில் இடம்பெற்ற தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குறே மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 201.3 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கி வைத்தனர்.
மேற்படி நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மதம் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.வி சிவஞானசோதி, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பாதுகாப்பு படை தளபதி, சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.