Breaking
Mon. Dec 23rd, 2024

-முஹம்மட் ஜஹான்-

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைக்கூட்டம் அண்மையில் இந்தியாவின் சென்னை நகரில் நிறுவன தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தலைமையில் இடம்பெற்றது தொடர்பாக நேற்று எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த முகாமைத்துவ சபைக்கூட்டத்தில் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தலைவர் தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கில் பயிற்சிப்பட்டறை மற்றும் விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் எண்ணக்கருவில் இந்த விற்பனை நிலையங்கள் மற்றும் பயிற்சிப்பட்டறை அமையப்பெறவுள்ளது.

வடக்கு.கிழக்கில் வேலையற்றிருக்கும் படித்த இளைஞர்,யுவதிகளுக்கு  தரம் உடைய சான்றிழுதடன் கூடிய பயிற்சிகளை இந்த பயிற்சி பட்டறை மூலம் வழங்கவுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.அத்துடன் அதிகமாக இளைஞர் யுவதிகளுக்கு இந்தியாவில் தொழிற் பயிற்சிகள் வழங்க எதிர் காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இலங்கையில் அதிக இலாபமீட்டும் நிறுவனமாக உயர்த்துவதற்கு அமைச்சருக்கு பக்கபலமாக செயற்படவுள்ளேன் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.தலைவர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இந்திய அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிநுட்ப பிரிவு ,விற்பனை பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

தலைவர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் முதற்தடவையாக சென்றுள்ளமை விசேட அம்சமாகும்.கடந்த காலங்களில் இருந்த தலைவர்கள் பணிப்பாளர்கள் இந்தியா சென்று நிறுவன அபிவிருத்தி குறித்து கலந்துரையாடவில்லை.

By

Related Post