Breaking
Mon. Dec 23rd, 2024
ரத்து செய்யப்பட்டிருந்த வடக்கு தொடருந்து வழி போக்குவரத்துக்கள் இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின தொடரூந்து தம்புத்தேகம மற்றும் செனரத்கம தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று தடம்புரண்டது.

இந்தநிலையில் தடம்புரண்ட தொடரூந்து நேற்றிரவு வரை மீளமைக்கப்பட்டிருக்காத நிலையில் அஞ்சல் தொரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வடக்கு தொடருந்து வழித் தடத்தில் நேற்று இரவு பயணிக்கவிருந்த 4 அஞ்சல் தொடரூந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது

By

Related Post