Breaking
Thu. Jan 9th, 2025

(சர்ஜூன் ஜமால்தீன்)

வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காகவும் அவர்களின் மீள்குடியேற்றத்;திற்காகவும் வடக்கில் உள்ள உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என புத்தளத்தில் இன்று 2013-08-28 நடைபெற்ற மக்கள் ஒன்று கூடலில் மன்னார் மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜ}ணைத் மதினி தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் இனவாதிகளால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்;டு வருகின்றன.

இத்தருணத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் எனினும் சிலர் இப்பிரச்சினையை வைத்து வடக்கில் அரசியல் செய்ய முற்படுகின்றனர். இச் செயற்பாடு வட மாகாண முஸ்லிம்களின் இருப்பையும் மீள்குடியேற்றத்தையும் குறிப்பாக அபிவிரு;தியை பாதிக்க கூடியதாக உள்ளது.

வடமாகாண முஸ்லிம்கள் பல வருடங்களாக வீடுகள் காணிகள் வாழ்வாதாரம் போன்றவற்றில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் வடமாகாண முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அரசியலே நமது சமுகத்திற்கு தற்போது தேவையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையை இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.குறிப்பாக வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக சில சக்திகள் இயங்குகின்றன இதற்கு முக்கிய காரணம் வடக்கு முஸ்லிம்கள் பல கூறுகளாக பிரிந்து கிடக்கின்றனர்.

இவ்வாறு பிரிந்து செயற்படுவது வடக்கு முஸ்லிம்களை மீண்டும் துயரத்திற்கு உட்படுத்தி விடும். இதனால் சமுகத்தை வழிநடத்தும் உலமாக்கள் தற்கால எதார்த்த வாத அரசியலை புரிந்து கொண்டு சமுகத்தை ஒண்றிணைக்க வேண்டியுள்ளது. வடக்கிலிருந்து துரத்தப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு தற்காலத்தில் பல தடைகள் ஏற்பட்டுள்ளதுடன் வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கபட்டுள்ளது.

எனவே இப்பிரச்சினைகள் தொடர்பாக கவலைப்படாதவர்களாக சமுகத்தை வழிநடாத்தும் உலமாக்கள் இருக்க முடியாது. எனவே வடக்கு முஸ்லிம்களின் எழுச்சி பற்றி யார் யார் சிந்திக்கின்றார்களோ அவர்களின் கரங்களை பலப்படுத்தி வடக்கு முஸ்லிம்களின் இருப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உலமாக்களாகிய எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. என மேலும் அவர்தெரிவித்தார்.

2s5

 

2s6

Related Post