முகுசீன் ரைசுதீன் ஆசிரியர் அவர்கள் எழுதிய “இலங்கையின் அரசியல் முறைமை” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று புதன் கிழமை மாலை 09-10-2014 அரசியல் பிரமுகர்கள், விசேட பிரதிநிதிகள் மற்றும் முசலி கல்விச் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் முசலி தேசிய பாடசாலை விழா மண்டபத்தில் இனிதே இடம்பெற்றது. அஷ்ஷைக் எகேஎம் சியாத் நளீமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய W M எகியான் அவர்களும் கௌவ்ரவ அதிதிகளாக பொறியியலாளர் A L புர்கானுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் மற்றும் ஏ சி கபூர் ஆசிரியர், எம் சி ஜுனைத் ஆசிரியர் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
முதற்பிரதியை பெற்றுக்கொண்ட முசலி பிரதேச சபை தவிசாளர் எகியான் அவர்கள் நூலாசிரியர் ரைசுதீன் அவர்களின் கல்விப்பணி தொடர வாழ்த்தியதோடு பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ், முசலி கல்வி சமூகத்தின் பயமிக்க கல்வி மறுமலர்ச்சி செயற்பாடுகளை முசலி வேண்டிநிற்பதாக சுட்டிக்காடினார்.
அத்தோடு வடக்கு முஸ்லீம்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை நினைவுபடுத்து முகமாகவும் ஒரு நிமிட நேர மௌனம் அனுஸ்டிக்கப்பட்டது.
ஏ டி ரைஸ்தீன் அதிபர் அவர்கள் நிகழ்சிகளை அழகுற தொகுத்து வழங்கியதோடு, ஆசிரியர் மஸ்தான் நூல் அறிமுகம் செய்ய, நூலாசிரியர் முகுசீன் ரைசுதீன் அவர்கள் ஏற்புரை வழங்க, ஆசிரியர் இஸ்பான், ஆசிரியர் ஜுனைத், ஆசிரியர் கபூர், பொறியியலாளர் ஏ எல் புர்கானுதீன் விசேட பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். இதய நிலா எம் சுகைப் மற்றும் பன்னூலாசிரியர், அகத்தி முறிப்பான் பரீத் மௌலவி அனைவரையும் கவிதை மழையில் நனைவித்தனர். இறுதியாக எஸ் சயீத் அவர்களின் நன்றி உரையோடு நூல் வெளியீடு நிறைவுபெற்றது.