Breaking
Sun. Dec 22nd, 2024
ஏ.எச்.எம்.பூமுதீன்
வடமாகாணத்திலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம்;களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி 02 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் பாரிய பணி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து நாடுபூராகவும் இடம்பெறவுள்ளது.
நாடுபூராகவும் உள்ள ஜூம்ஆ பள்ளவாசல்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கையெழுத்து வேட்டையை ஐந்து அமைப்புக்கள் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம், உடனடித் தீர்வுக்கான குழு, அல்ஜாஸீம் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வடமாகாண  உலமா சபை ஆகியனவே அந்த 05 அமைப்புக்களுமாகும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தும் குறித்த கையெழுத்து வேட்டை கடந்த ஏழாம் திகதி மன்னார் – மறிச்சிக்கட்டியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒரு வார காலத்தை மையப்படுத்தியதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்து வேட்டை இன்று 11ம் திகதியான 05ம் நாள் நாடுபூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆறாம் நாளான நாளை வெள்ளிக் கிழமை 12ம் திகதி ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து இந்த கையெழுத்துக்களை திரட்டும் பணி தீவிரப்படுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி ஞாயிறு தினங்களிலும் இந்தப்பணியை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை, ஜூம்ஆ பள்ளிகளின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் கையெழுத்து திரட்டும் ஆவணத்தில் கட்சி வேறுபாடுகள் துறந்து தத்தமது கையெழுத்துக்களை பதிவு செய்யுமாறு மேற்படி 05 அமைப்புக்களும் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றன.
வடமாகாண முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீளக்குடியேறுவதற்கு பெரும்பான்மையின இனவாதக் கும்பல்களும் அரசியல் பிரமுகர்களும் அவ்வப்போது ஆட்சி பீடம் ஏறும் அரசாங்கங்களும் தடைகளையும் ,ஒத்துழையாமை செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்ததன் உச்சக்கட்டமாக  இன்று வில்;பத்து என்ற போர்வையில் அந்த தடைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதன்பின்னணியில் தான் குறித்த கையெழுத்து திரட்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திரட்டப்படும் 02 இலட்சம் கையெழுத்துக்களும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இவர்கள் தலைமையிலான அரசிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு மக்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தப்படவுள்ளது.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தும் கையெழுத்து வேட்டையில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழ் ,கிரிஸ்தவ மற்றும் சிங்கள மக்களும் இணைந்து கொண்டு தமது கையெழுத்துப் பதிவுகளை ஆங்காங்க மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாண முஸ்லிம்கள் தமது சொந்த தாயகத்தில் மீள்குடியேற வேண்டும் என்ற நியாயத்தையும் உண்மையையும் மறுதலிக்கும் ஒரு கூட்டம் ஒருபக்கம் இருக்கத்தக்கதாக மறுபக்கம் இதன் உண்மைத் தன்மையை விளங்கிய ஒரு பெரும் கூட்டமும் இந்த வடமாகாண முஸ்லிம்களுக்காக ஆதரவாக குரல் கொடுப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் கண்கொண்டு நோக்காது தமது சகோதர மக்களின் பிரச்சினையாக நோக்குமாறும் மேற்படி அமைப்புக்கள் பகிரங்கமாக கருத்து வெளிப்படுத்தியுள்ளன.
இந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அன்று முதல் இன்று வரை தனித்து நின்று துணிவோடு பணியாற்றி வரும் அமைச்சர் ரிசாதை கைது செய்யுமாறும் அமைச்சுப்பதவியிலிருந்து விலக்குமாறும் சிறையில் அடைத்து உதைக்குமாறும் பௌத்த இனவாதக் குழுக்கள் பாரிய அளவில் நாடுபூராகவும் குரல் எழுப்பும் இத்தருணத்தில் ,பௌத்த தேரர்களின் தலைமைத்துவ இடமாக மதிக்கப்படுகின்ற சங்;கைக்குரிய அஸ்கிரிய பீடமும் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுப்பது முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் மட்டுமன்றி மிதவாகப் போக்குக் கொண்ட பௌத்த இந்து மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அரசியல் , கட்சி வேறுபாடுகளெல்லாம் மறந்து அனைத்துக் கட்சி முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் ஒன்றுபட்ட நல்ல சகுனம் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்று அது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.
அந்த வகையில் நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்களும் கட்சி அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடும் தருணம் இந்த கையெழுத்து வேட்டையின் மூலம் புது அத்தியாயமாக தோற்றம் பெற்றவண்ணம ; உள்ளன.
நாளை இடம்பெறும் ஜூம்ஆ பிரசங்கங்களிலும் அதன்பின்னரான துஆ பிரார்த்தனைகளிலும் வடமாகாண முஸ்லிம்களின் நிம்மதியான , கௌரவமான மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் அதை தத்தமது பிரார்த்தனைகளிலும் இணைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நாளை தாங்கள் பங்கு கொள்ளும் ஜூம்ஆ பள்ளிகளில் வைக்கப்பட்டிருக்கும் கையெழுத்து இடும் பதிவில் தங்களது கையெழுத்தையும் இட்டு மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி எமது சகோதர வடமாகாண முஸ்லிம்களின் நிம்மதிக்காக ஒத்துழைக்குமாறுமு;  மேற்படி ஐந்து அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Related Post