Breaking
Mon. Dec 23rd, 2024
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி  வெள்ளிக்கிழமை மருதானை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்லிம் உரிமைக்கான அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் மும்மொழியிலும் எழுதப்பட்ட வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தி நின்றனர். சுமார் ஒரு மணித்தியாலயம் வரை இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சராப்தீன்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் செலுத்திவருகின்ற பார்வை போதுமானதாக இல்லை.இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும்.

எமது முஸ்லிம் சகோதரர்கள் இவ்வாறு அகதிகளாக இருப்பதை எம்மால் இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார். வடக்கில் வாழ்ந்த மக்கள் அவர்களது பிரதேசங்களுக்கு செல்கின்ற போது அவர்களை இனவாதிகளாக,வேறு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறுவது மேலும் வெளியேற்றப்பட்ட மக்களை வேதனைப்படுத்தும் செயல் என்றும் மநாகர சபை உறுப்பினர் இதன் போது கூறினார்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

By

Related Post