நாட்டின் வடக்கு மற்றும் வட கிழக்கு கரையோரங்களில் கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளை மழை பெய்வதுடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது, வங்காள விரிகுடாவில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர்வரை அதிகரிக்கக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ஊடாக மன்னார் முதல் திருகோணமலை வரையான கடற் பகுதியிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பகுதியிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50கிலோமீற்றர் முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(TK)