Breaking
Sat. Nov 16th, 2024

ஏ.எஸ்.எம்.ஜாவித்

மன்னார், விடத்தல்தீவு சுஐப் எம். காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையுடன் நேற்று மாலை (06) கொழும்பு-10, தபால் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீனும், விடே அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூதும் சிறப்பு அதிதிகளாக கிழக்குமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான நஜீப் ஏ மஜீத், கிழக்குமாகாண சபை உறுப்பினர் சுபைர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல்யாஸ், முசலி பிரதேச சபை தவிசாளர் டபிள்யு. எம்.யஹ்யான், உட்பட பல அரசியல் பிரமுகர்கள், வடமாகாண புத்தி ஜீவிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது வரவேற்புரையை சமுகஜோதி எம்.ஏ.றபீக் வழங்கியதுடன், நூலாசிரியர் அறிமுகத்தினை கலைஞர் கலைச் செல்வன் வழங்கியதுடன், வாழ்த்துரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. எம். நிலாம் வழங்கினார், கருத்துரையை ஊடகவியலாளர் ஏ.ஜி.எம். தௌபீக் வழங்கினார், நூல் ஆய்வினை கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ். அனீஸ் வழங்கினார், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகைர் சிறப்புரையை வழங்கினார், சிறப்பு விருந்தினர் அமைச்சர் றிஷாத் பதியுதீனும், கௌரவ விருந்தினர் பஷீர் சேகுதாவுதும் உரை நிகழ்த்திய பின்னர். ஏற்புரையை நூலாசிரியர் சுகைப் எம் காசிம் வழங்கினார்.

நூலின் முதற்பிரதியை தேசமான்ய யஹ்யான் பெற்றுக் கொண்டதுடன் ஏனைய பிரதிகளை பிரமுகர்கள் அனைவரும் அதிதிகளிடமிருந்தும் நூலாசிரியரிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர்.

Related Post