வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதம கொறடா ஆகியோர்களின் பெயர்களை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
நடை பெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் எதிர்கட்சியாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காணப்படுவதால் எதிர்கட்சி தலைமைப் பதவி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனுக்கும்,எதிர்கட்சியின் பிரதம கொறடா பதவியினை ஜக்கிய முன்னணியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரை் றிப்கான் பதியுதீனுக்கும் வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும்,அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
இந்த நியமனம் தொடர்பில் வடமாகாண சபை தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.