வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முசலி பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரு நாள் கோழிக்குஞ்சிகள் வழங்கிவைக்கப்பட்டது
முசலி பிரதேசத்தில் வாழும் மக்களின் வறுமை நிலையினை மாற்றி அமைக்கவும் சுயதொழில் செய்து தமது குடும்பங்களை கொண்டு செல்லும் ஒரு வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இக் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது
முசலி பிரதேச சபைக்குட்பட்ட 5 கிராமத்தில் வாழும் சுமார் 100ம் மேட்பட்ட குடும்பங்களுக்கே இக்கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டது நாளொன்றுக்கு குறைந்தது ஒரு குடும்பம் 1500 ரூபாய்களை வருமானம் பெறக்கூடிய சந்தர்ப்பம் இதில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது
மேலும் நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் ” சென்ற தடவை எனது நிதியில் மன்னாரில் உள்ள பலருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது ஆனால் இம்முறை நாங்கள் முசலி பிரதேசத்தில் நிலவும் வறுமை மற்றும் தொழில் இன்றி கஷ்டப்படும் குடும்பங்களை கருத்திற்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இக் கோழிக்குஞ்சுகள் அனைத்தையும் முசலி பிரதேசத்திற்கு வழங்குகின்றோம் அதுமட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் நான் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது போன்ற அபிவிருத்தி செயட்பாடுகளில் ஈடுபடுவேன் அரசியல் என்பது ஒரு நிரந்தரமற்ற ஒன்று அவ்வாறு நிரந்தரமற்ற அரசியலை நாங்கள் தவறான முறையில் பயன்படுத்துவது பாரிய குற்றமாகும் அந்தவகையில் நாங்கள் யாரிடமும் அரசியல் பார்த்து சேவை செய்யவில்லை எமது சமூகம் என்ற அடிப்படையிலே நாங்கள் சேவைகளை செய்து வருகின்றோம் எனவே இந்த உதவிகள் தொடர்ந்தும் உங்களை சேர இறைவனை பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் ” என தெரிவித்தார்
மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் மீள் குடியேற்ற துரித செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்