Breaking
Wed. Jan 8th, 2025

வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆனமடுவ ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஆடிகம – கரநாயக்கம ஐதேக அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Post