Breaking
Sun. Dec 22nd, 2024

மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டு நிறைவு கூறும் நிகழ்வு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் மாகாணசபை அமைச்சர் டெனிஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

நிகழ்வுக்கு வருகைதந்த அனைத்து அரசியல் பிரமுகர்களும் தமது நினைவுரையை நிகழ்வில் பகிர்ந்துகொண்டனர் இதன்போது உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் ” 1985ம் ஆண்டில் இடம்பெற்ற படுகொலை சம்பவமானது எனது சிறு வயதில் நடைபெற்றது இன்னும் என் நினைவில் இருக்கின்றது. இதே பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய ஒருவரும் இரண்டு ஆசிரியர்களும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இறந்தார்கள். ஏன் இறந்தோம் என்று தெரியாத நிலையில் இந்த மண்ணை விட்டு பிரிந்த சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை இத்தருணத்தில் செலுத்துகின்றேன்

அன்றைய தினம் எமக்கு ஏற்பட்ட அநீதி இன்றும் எம்மால் மறக்க முடியாது இவ்வாறு ஒரு அநீதியும் கொடுமைகளும் மீண்டும் எம்மை நெருங்க நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது. மதத்தினால் வெவ்வேறாக இருந்தாலும் தமிழ் என்னும் அடிப்படையில் நாங்கள் அனைவரும் தமிழர்களே இன்று அரசியலில் இருப்பவர்கள் சிலர் தமது அரசியல் ஆசனத்தினை தக்கவைப்பதற்காக இனவாதத்தினை தூண்டுகின்றார்கள் ஆனால் மக்கள் ஒருபோதும் அவற்றினை நம்பி இனவாதங்களில் ஈடுபடக்கூடாது முஸ்லீமாக இருந்தாலும் சரி தமிழாக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி ஒற்றுமையினை கடைபிடிக்க வேண்டும் நாம் செல்லும் பாதை சிறந்ததாக இருந்தால்தான் எமது அடுத்த தலைமுறை நிம்மதியான ஒற்றுமையான ஒரு வாழ்க்கையினை வாழ முடியும் அந்தவகையில் நிகழ்வில் வரவேற்புரையாற்றிய சகோதரர் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நினைவு மண்டபம் ஒன்று அவர்களது பெயர் நிலைக்கும் வகையில் அமைத்துத்தருமாறு இங்கு வருகை தந்துள்ள அதீதிகளிடன் வேண்டுகோள் விடுத்தார்16265374_371198389921298_3442321633709452349_n 16266083_371198433254627_4234833097840297837_n 16298931_371198453254625_4558142574823974724_n (1) 16387926_371198486587955_8412575345966786488_n

Related Post