ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் மீதான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.பாணந்துரை பிரதான மஜிஸ்த்ரேட் ருசிர வெலிவத்தவினால் இவ்வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கியதாக கூறப்பட்டு தேரருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சிகள் ஆறுபேரை அடுத்த விசாரணையின் போது நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றத்தினால் இன்று நோட்டீசு வெளியிடப்பட்டுள்ளது.வட்டரக தேரரை கைது செய்யும்போது அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட இரகசிய கடிதங்கள் அடங்கிய பையை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து பெற்றுத் தருமாறு தேரர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தப் பை வழக்குடன் தொடர்புபடாது போனால், அதனை அவரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.