Breaking
Sun. Apr 27th, 2025

பொதுபல சேனா அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடொன்றின் பேரில் ஜாதிக பல சேனாவின் செயலாளர் வட்டரக விஜித தேரர் இன்று(28) நாரஹேன்பிட்ட பொலிசுக்கு வாக்குமூலம் வழங்க வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டரக விஜித தேரர் தேசியக் கொடியை அகௌரவப்படுத்தியதாக தெரிவித்து, பொதுபல சோன விஜித தேரருக்கு எதிராக கிருலப்பன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த இந்த முறைப்பாட்டை விசாரணை செய்ய கிருலப்பனை பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் போது, தனக்கு பாதுகாப்புப் பிரச்சினை காணப்படுவதாக வட்டரக விஜித தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனால், தன்னை வேறு ஒரு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு விஜித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளின் பேரிலேயே அவர் இன்று நாரஹேன்பிட்ட பொலிசுக்கு வாக்குமூலம் வழங்க வருகை தரவுள்ளார்.

தேசிய கொடிக்கு அகௌரவம் ஏற்படுத்தியதாக தனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தான் அறிந்த வகையில் அவ்வாறான எதுவும் இடம்பெறவில்லையென வட்டரக விஜித தேரர் நேற்று(27)  தனிப்பிட்ட ரீதியில் ஊடகமொன்றிடம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post