Breaking
Mon. Dec 23rd, 2024

வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீள்பரிசீலனையொன்றை மேற்கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளன.

அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட வட் வரி காரணமாக பொதுமக்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக குறித்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் 149 முன்னணி சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சிவில் சமூக அமைப்பொன்றின் முக்கியஸ்தரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளன.

அதற்குள்ளாக வட் வரி அதிகரிப்பில் மாற்றங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், வரி அதிகரிப்பை எதிர்த்து அனைத்து வழிகளிலும் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் தொடர்ந்தும் எச்சரித்துள்ளது.

By

Related Post