Breaking
Sun. Mar 16th, 2025

சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான ஒரு விளக்கமாகவோ அல்லது கருதுகோளாகவோ இருக்கும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கும்.

பொதுவாக சட்டவிரோதமான, மறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட அல்லது தீங்கிழைக்கும் தொடர்புடைய இரகசியங்கள் அல்லது நிகழ்வுகளை சார்ந்தே தான் இந்த சதியாலோசனை கோட்பாடுகள் பிறக்கும்..! அப்படியாக, நாசாவும் பிற உலக நாட்டு அரசாங்கமும் பூமி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஒரு மர்மமான இராட்சத ஓட்டை பற்றிய தகவல்களை முற்றிலுமாக மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஒரு சதியாலோசனை கோட்பாட்டாளர்..!

உள் சூரியன்:

மேலும், மிகவும் நம்ப முடியாத வண்ணம் அந்த ஓட்டையின்கீழ் ஒரு முழுமையான முறையிலான தாவரங்கள், விலங்குகள், மனித நாகரீகங்கள் மற்றும் உள் சூரியன் உள்ளன என்றும் சதியாலோசனை கோட்பாடுகள் கிளம்பி உள்ளன.

ஆராயும் போது

செக்யூர்டீம்10 (SecureTeam10) என்ற சதி கோட்பாட்டாளர்களின் குழுவானது, நாசாவின் வட துருவ படங்கள் மற்றும் வீடியோக்களை ஆராயும் போது ஒரு மாபெரும் விடயம் (ஒரு நிலையான துளை) மறைக்கப்படுவதை நம்புகின்றன.

வெற்று பூமி கோட்பாடு:

இதனால் எட்மண்ட் ஹாலி மூலம், 1692-ஆம் ஆண்டு முதன்முதலில் உருவான வெற்று பூமி கோட்பாடு (hollow earth theory) மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மைய பாகம்:

பூமிக்குள் – வெள்ளி, செவ்வாய் , மற்றும் புதன் கிரகங்களின் விட்டத்தின் அளவில், சுமார் 800 கிமீ ( 500 மைல்கள்) தடினமான ஒரு வெற்று ஷெல் உள்ளது தொடர்ந்து இரண்டு உள் பொதுமையக் கூடுகள் மற்றும் அதன் மிகவும் உள்ளே மைய பாகம் உள்ளது என்பது தான் வெற்று பூமி கோட்பாடு.

ஜான் சிம்மஸ் :

அதனை தொடர்ந்து 1818-ஆம் ஆண்டு ஜான் சிம்மஸ் என்பவர் மூலம் அடர்ந்த கோளங்கள் மற்றும் துருவ வெற்றிடம் கோட்பாடு (theory of concentric spheres and polar void) உருவாக்கம் பெற்றது.

ஆய்வு பயணம்:

ஜான் சிம்மஸ், அரசாங்கத்தின் உதவி மற்றும் நிதியை பெற்று பூமியின் வெற்றிடத்தை நோக்கிய ஆய்வு பயணம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டதாகவும், ஜான் சிம்ஸின் அந்த வாழ்நாள் கனவு ஆய்வு நடைபெறாமலேயே 1829-ல் இறந்தார் என்றும் வரலாற்று பதிவு உள்ளது. ஆராய ஒரு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

அரிய நிகழ்வுகள்:

பிறகு, ஏகப்பட்ட பூமி வெற்றிட கோட்பாட்டு ஆய்வாளர்கள், பூமி கிரகத்தில் மாபெரும் துளையை இட்டு ஆய்வு மேற்கொள்ள முயற்சித்தனர், அப்போது பல குழுக்களை சேர்ந்த ஆய்வாளர்கள் சில அரிய நிகழ்வுகள் மூலம் உயிரிழந்தனர்.

By

Related Post